ரஜினி தற்போது ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘லிங்கா’ வெளியானதும் ‘கோச்சடையான்’ படத்தின் 2–ம் பாகத்துக்கான படவேலைகள் துவங்குகிறது. இது குறித்து கோச்சடையான் பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறும் போது, கோச்சடையான் படம் தமிழிலும் நன்றாக ஓடி சிறந்த வசூலை ஈட்டியுள்ளது.
தியேட்டர்களும் அதிகபடுத்தப்பட்டது. இதர தென் மாநிலங்களிலும் பெரிய வசூல் ஈட்டி தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. வெளிநாடுகளிலும் வரவேற்பு கிட்டியுள்ளது. இந்தி பேசும் வட மாநிலங்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும் முதல் வந்து விடும். கோச்சடையான் இரண்டாம் பாகத்தை சிறப்பாக எடுப்போம் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி