தற்போது மீண்டும் வருகிற தீபாவளி தினத்தில் விஜய்-அஜீத் மோதிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உருவாகியிருக்கிறது. விஜய் நடிக்கும் கத்தி படத்தை வேகமாக வளர்த்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி ரீமேக்கான இந்தி ஹாலிடே படம் தொடர்பாக மும்பை சென்றிருப்பதால் கத்தி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 55வது பட வேலைகள் இடையிடையே சில நாட்கள் நிறுத்தப்பட்டாலும், தற்போது சூடுபிடித்து விட்டது. பொங்கலுக்கு வீரத்தை வெளியிட்ட அஜீத்துக்கு இந்த ஆண்டு இன்னொரு படத்தை கொடுத்து விட வேண்டும் என்று ஆர்வம் அதிகரித்துள்ளதாம்.
ஒருவேளை இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டால், விஜய்யின் கத்தி வெளியாகும் தீபாவளிக்கு அஜீத்தின் 55வது படத்தையும் வெளியிட்டு விட வேண்டும் என்று நினைக்கிறாராம். அதன்காரணமாக, அப்படத்திற்கு தேவையான செட் வேலைகள் கூட தற்போது தடபுடலாக முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி