செய்திகள்,திரையுலகம் விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…

விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…

விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!… post thumbnail image
சென்னை:-இந்தியில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. தற்போது விஜய் படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை சிம்பு தேவன் இயக்குகிறார். இவர் இம்சை அரசன் 23–ம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டுக் சிங்கம் படங்களை எடுத்து பிரபலமானவர்.ஸ்ரீதேவியை அணுகி டைரக்டர் கதை சொன்னதாகவும் அவருக்கு பிடித்து போனதால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

அருந்ததி, மகதீரா தெலுங்கு படங்களை போல் சரித்திர காலத்தையும் இந்த காலத்தையும் கலந்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளதாம். இதில் ஸ்ரீதேவி அரசி வேடத்தில் வருகிறாராம். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.இந்த படம் விஜய்க்கு 58 வது படம் ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி