செய்திகள்,திரையுலகம் மேகா (2014) பட டிரெய்லர்…

மேகா (2014) பட டிரெய்லர்…

மேகா (2014) பட டிரெய்லர்… post thumbnail image
ஜி.பி.ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ், செல்வகுமார் தயாரிக்கும் படமே மேகா. அஸ்வின், சிருஷ்டி தாங்கே, அங்கனா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், பழனிபாரதி எழுதியுள்ளனர்.

மேகா படம் குறித்து படத்தின் டைரக்டர் கார்த்திக் ரிஷி கூறுகையில், புதிய கோணத்தில் சொல்லப்படும் காதல் கதை இது. புதிய இசை வடிவில், படம் உருவாக வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா ஹங்கேரி சென்று, சிம்பொனி இசைக் கலைஞர்களை வைத்து பாடல்களை உருவாக்கினார். அவரும், யுவன் சங்கர் ராஜாவும் தலா இரண்டு பாடல்களை பாடியிருக்கின்றனர். படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடக்கிறது, படம் விரைவில் வெளியாகும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி