அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இருவரும் வாடிகனுக்கு செல்லவுள்ளனர். இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வாடிகன் தேவாலயத்தில் வழக்கமான பிராத்தனையுடன் இஸ்லாமிய தொழுகையும் நடத்தப்படுகிறது. தொழுகையின் இடையில் திருக் குர்ஆனின் வசனங்களும் வாசிக்கப்படும் என இஸ்ரேல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டு வழிபாட்டு நிகழ்வினை உலகம் முழுவதும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், சிலுவைப் போர்க் காலத்தில் தொடங்கி பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இடையில் நிலவும் தீராப்பகையை ஒழித்து, இரு நாட்டுக்கும் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முன் முயற்சியை போப் பிரான்சிஸ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி