சென்னை:-துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகியாய் அறிமுகமானவர் ஷெரீன். தனுஷுக்கு ஜோடியாய் அப்படத்தில் நடித்தார் துள்ளுவதோ இளமை படம் சூப்பர்ஹிட்டானது.அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகையாய் உயர்ந்தார் ஷெரீன்.
தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் எவரையும் மதிக்காமல் அலட்சியப்படுத்தியதன் காரணமாகவே சீக்கிரமே மார்க்கெட் இழந்தார். அதன்பிறகு படம் இயக்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஆளையே காணவில்லை.
இந்நிலையில் பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாய் நடிக்கும் எண்ணத்தில் ஃபோட்டோ ஷூட் பண்ணிய ஷெரீன், தன்னுடைய கவர்ச்சிப் படங்களை பி.ஆர்.ஓ.கள் மூலம் படக்கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி