இந்த ஆட்டம் பெங்களூரில் ஆகஸ்டு 17 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணியுடன், 23 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மோதுகிறது. இந்திய அணியில் சீனியர் வீரர்களான சுனில் சேத்ரி, ராபின்சிங், பிரான்சிஸ் பெர்னாண்டஸ் ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.இந்த போட்டிக்கான இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் பெங்களூரில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. தலைமை பயிற்சியாளர் விம் கோவெர்மன்ஸ் மேற்பார்வையில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடுகிறது. இந்த பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
அம்ரிந்தர்சிங், குர்பிரீத்சிங் சந்து, ரவிக்குமார், கமல்ஜித்சிங் (கோல்கீப்பர்கள்), பிரித்தம் கோதல், கீனம் அல்மெய்டா, தீபக் தேவ்ராணி, ஜோய்னெர் லுரென்கோ, ஷங்கர் சாம்பின்ஜிராஜ், சந்தேஷ் ஷிங்கன், சலாம் சிங், நாராயண் தாஸ், ஷோவிக் கோஷ் (பின்களம்),பிரனாய் ஹால்டெர், ரோவ்லின் போர்ஜெஸ், கிளிப்டன் டியாஸ், ஆல்வின் ஜார்ஜ், சியம் ஹங்கல், லால்ரின்டிகா ரால்டே, தனபால் கணேஷ், மிலன்சிங் (நடுகளம்), பிரான்சிஸ் பெர்னாண்டஸ், ரோமோ பெர்னாண்டஸ், செய்மின்லென், சுனில் சேத்ரி, ராபின்சிங், ஹாகிப், அலேஷ் சவாந்த், மந்தர் ராவ் தேசாய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி