செய்திகள்,திரையுலகம் நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!…

நான் நடிப்பதை யாரும் தடுக்க முடியாது என நடிகை அஞ்சலி பரபரப்பு பேட்டி!… post thumbnail image
சென்னை:-‘தமிழ் எம்.ஏ’, ‘அங்காடி தெரு’, ‘கருங்காலி’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. சித்தி பார்வதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தமிழ் சினிமாவை விட்டு அஞ்சலி விலகியிருந்தார். தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் தமிழில் நடிக்கப் போவதாக தகவல் வந்தது. இது குறித்து அஞ்சலி கூறியதாவது:-நான் என்னுடைய பிரச்சனைகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். தெலுங்கு படத்தில் நடித்து வந்த நான் படப்பிடிப்பை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முடித்துவிட்டேன். தற்போது புனித் ராஜ்குமாருடன் கன்னட படத்தில் நடித்து வருகிறேன்.

நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை யாரும் தடுக்க முடியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் எல்லோரும் எனக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். இனி என்னை வைத்து படம் எடுக்க விரும்பும் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன்பு இருந்ததைப்போல் எப்போதும் சிறப்பாக நடித்துக் கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி