சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்ததும் அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக மூன்று வரன்களை ஏற்கனவே பார்த்து இருக்கிறார்களாம். இதில் ஒருவர் தொழில்அதிபர், மற்றவர்கள் டாக்டர், என்ஜினீயர் ஆவர். இவர்கள் தவிர, மேலும் நல்ல வரன்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் அனுஷ்கா திருமணம் இருக்கும் என்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி