அந்த வகையில் முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் ஒரு பிரச்னைய வைத்துதான் கதை பண்ணியுள்ளார் கெளதம்மேனன். அதனால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் சென்னையைச்சுற்றித்தான் நடக்க உள்ளதாம். ஆரம்பத்தில் ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தியவர்கள், பின்னர் சென்னை மவுண்ட் ரோட்டில் எடுத்தனர். அதையடுத்து இப்போது கொட்டிவாக்கம் பகுதியில் நடத்தி வருகின்றனர்.இதன்பிறகு சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் அவுட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டு, பின்னர் தற்போது உருவாகி வரும் செட்டுக்குள்ளேயே பாடல், சண்டை காட்சிகள் என பெரும்பாலான காட்சிகளை படமாக்குகிறாராம் கெளதம்மேனன்.
மேலும்,. தற்போது சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கும் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வரும் கெளதம், யூத் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரு மாத கேப் கொடுத்து அஜீத்தின் உடம்பை இன்னும் குறைத்து அவரது ஹேர் ஸ்டைலையும் கருப்பாக மாற்றி படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி