சென்னை:-சென்னையில் இருந்து கிழக்காக சுமார் 120 கடல் மைல் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்களை கைது செய்ததாகவும், படகுகளையும் அவற்றில் இருந்த சுமார் 750 கிலோ மீனையும் பறிமுதல் செய்து பிடிபட்டவர்கள் மீது இந்திய கடல் எல்லை சட்டத்தை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் அனைவரும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி