பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கும் இந்த விளம்பரப்படத்தில் சூர்யா நடித்து முடித்த பிறகு மீண்டும் அஞ்சான் படப்பிடிப்பு தொடங்குகிறது.மும்பையில் ஏற்கனவே படப்பிடிப்பு நடைபெற்ற ஏரியாக்களிலேயே மீண்டும் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். அஞ்சான் படத்தில் ராஜூ பாய் என்ற வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.
மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் மிகப்பெரிய தாதாவாக விளங்கும் ராஜூ பாயை அப்பகுதி மக்கள், அந்தேரி புலி என்று அழைக்கின்றனராம். இதை உறுதிப்படுத்துவதுபோலவே அஞ்சான் படத்தில் சூர்யாவின் அறிமுகப்பாடலில் அந்தேரி புலி என்ற வாசகங்களுடன் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி