அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!… post thumbnail image
நகரி:-சீமாந்திரா முதல் மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு வருகிற 8ம் தேதி பதவி ஏற்கிறார்.விஜயவாடா– குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் 8ம் தேதி இரவு 7.27 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் 11 மாநில முதல் மந்திரிகளுக்கு சந்திரபாபுநாயுடு அழைப்பு விடுத்து உள்ளார்.

இதுதவிர எம்.பி.க்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்பட 5 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. அவருடன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் வருகிறார்கள்.மேலும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அவரது மகனும் பஞ்சாப் துணை முதல்– மந்திரியுமான சுக்பீர்சிங் ஆகியோரும் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக தெலுங்கு தேச கட்சி செயலாளர் சுப்பாராவ் கூறினார்.

பதவி ஏற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் ஜனசேனா கட்சி தலைவரும், சிரஞ்சீவி தம்பியுமான நடிகர் பவன்கல்யாண் பங்கேற்கிறார். இதற்காக கோடை விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் ஐரோப்பா சென்று இருக்கும் பவன்கல்யாண் உடனடியாக ஐதராபாத் திரும்புகிறார்.பதவி ஏற்பு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடக்க இருக்கிறது.விழா நடைபெறும் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் 40 பேர் அமரும் வகையில் மேடை அமைக்கப்படுகிறது. 5 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு தனி இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது.கலைநிகழ்ச்சிகள் நடக்க தனி மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது.

விழாவில் தொண்டர்கள் பங்கேற்பதற்கு வசதியாக அனைத்து ரெயில்களும் குண்டூர் அருகே நின்று செல்ல ஏற்பாடு செய்யபபட்டு உள்ளது.மேலும் ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு 150 பேர் பயணம் செய்யும் வகையில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மிகவும் ஆடம்பரமாக விழா நடத்தப்படுவதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீதர் ரெட்டி கூறியதாவது:–பதவி ஏற்பு விழாவுக்காக சந்திரபாபுநாயுடு ரூ.30 கோடி செலவு செய்கிறார். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லாத நிலையில் அரசு பணத்தை வீணடிக்கிறார்.

விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியவில்லை. ஆனால் தனது பதவி ஏற்பு விழாவுக்கு மின்சாரம் வழங்க தனி துணை மின் நிலையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்து வருகிறார். தலைநகர் கட்ட நிதி தாருங்கள் என பொதுமக்களிடம் வசூல் செய்யும் சந்திரபாபு நாயுடு ஆடம்பரமாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன.இதன் மூலம் ஆட்சிக்கு வரும் முன்பே ஊழல் திரையை விலக்கி விட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி