இந்நிலையில் அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, சமீபத்தில் ‘களவு தொழிற்சாலை’ படத்திற்காக டப்பிங் பேச வந்த இயக்குனர் மு.களஞ்சியத்திடம் கேட்டதற்கு, என்னுடைய படத்திற்கு ‘ஊர்சுற்றி புராணம்’ என பேர் வைத்ததாலோ என்னவோ, அஞ்சலியைத் தேடி ஊர் ஊராக சுத்திக்கிட்டு இருக்கிறேன்.
தெலுங்கு, கன்னடம் என்று அஞ்சலி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தை மட்டும் தவிர்க்கிறார். அஞ்சலி, போன வருடம் மார்ச் மாதம் 12 நாட்கள் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அம்போன்னு விட்டுவிட்டு போயிட்டார்.
நானும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பிலிம்சேம்பர், கில்டு, பெப்சி, இயக்குனர் சங்கம் என்று புகார் கொடுத்தேன். இன்னும் விடிவுகாலம் வரவில்லை. இப்போது அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. அப்படி நடிப்பதாக இருந்தால் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து, நடித்து விட்டு மற்ற படங்களில் நடிக்கலாம்.
இதுபற்றி எல்லா சங்கங்களுக்கும் என் பிரச்சனைகளையும், பணம் முடங்கிக் கிடக்கிற விஷயங்களையும் விளக்கமாக எழுதி கொடுத்திருக்கிறேன். முடிவு தெரியவில்லை என்றால் அஞ்சலி நடிக்கிற எந்த படமும் எந்த மொழியிலும் வெளியாக முடியாதபடி நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க வேண்டியிருக்கும். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஆதங்கத்துடன் கூறினார்.மேலும் அவர் கூறும்போது, நான் இயக்கிய பூமணி படத்தை மராத்தியில் அதுல் குல்கர்னியை வைத்து இயக்க உள்ளேன். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருகிறது. ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுதுறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். கார்த்திகேயன் என்ற புதியவர் இயக்கும் ‘கோடைமழை’ என்ற படத்தில் வெள்ளைத்துறை என்ற என்கவுண்டர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி