ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன. மீண்டும் ஷங்கரும், ரஜினியும் இணைந்து தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.விக்ரம் நடிப்பில் எடுக்கப்பட்ட ஐ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அதேபோல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் லிங்கா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.
இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு இவர்கள் மீண்டும் இணைகிற எந்திரன் 2 படம் தொடங்கப்படவிருக்கிறது. 240 கோடி செலவில் தயாராக உள்ள இப்படத்தை கல்பாத்தி அகோரம் மறுத்துவிட்டதால் தற்போது ஈராஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி