சென்னை:-சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ‘இந்தியா’ என்ற படத்தை டைரக்டு செய்வதுடன், அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் வருகிறார். கதாநாயகர்களாக அவருடைய மகன்கள் விஜய சிரஞ்சீவி, ஜெய் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தாம்பரத்தை அடுத்த கோகுலம்பாக்கத்தில் நடந்தது.
விஜய் சிரஞ்சீவி, ஜெய் ஆகியோருடன் ஜாகுவார் தங்கம் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு தாவுவது போன்ற காட்சியில் ஜாகுவார் தங்கம் நடித்தபோது அவர் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்தது. கீழே விழுந்த அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டது.
உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி