செய்திகள்,முதன்மை செய்திகள் கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!…

கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!…

கொல்லப்படுவதற்கு முன்பாக ஜான் கென்னடியை விவாகரத்து செய்ய விரும்பினார் அவர் மனைவி என புத்தகத்தில் தகவல்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி சுட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற தான் விரும்புவதாக கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இது கடந்த 1956ம் ஆண்டு நடந்துள்ளது. இத்தகவல், ஜாக்குலின் கென்னடி ஓனாசிஸ் எ லைப் பியாண்ட் ஹெர் வைல்டஸ்ட் ட்ரீம்ஸ் என்ற புதிய புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புத்தகத்தை டார்வின் போர்ட்டர் மற்றும் டான்போர்த் பிரின்ஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். முன்னாள் முதல் குடிமகளான ஜாக்குலின் ஜான் கென்னடி ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பாகவே தனது தாயாரிடம் எனது வாழ்வின் மீதமுள்ள நாட்களை கென்னடியுடன் கழிக்க முடியாது. அது நடக்க போவதும் இல்லை என கூறியுள்ளார்.தனது மகனின் திருமண வாழ்க்கையை பாதுகாக்க கென்னடியின் தந்தை ஜோ மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, தனது மருமகளை மான்ஹேட்டனில் உள்ள ரிட்ஜ் டவர் ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார்.அங்கு உள்ள லே பெவிலியன் விடுதியில் வைத்து, தனது மகனுடனான திருமண வாழ்வில் தொடர்ந்து நீடிப்பதற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜாக்குலின், அவரால் கொடிய வியாதி எனது வீட்டிற்கு கொண்டு வரப்படும் அபாயம் உள்ளது. எனவே, அதற்கு 2 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும் என தெரிவித்துள்ளார். ஜாக்குலினின் இந்த அதிரடி பதிலுக்கு முன்பாக மற்றொரு சம்பவம் நடந்தது.வாஷிங்டன் நகரில் உள்ள செனட் அலுவலக கட்டிடத்தில் தற்செயலாக ஜாக்குலின் சென்றுள்ளார். அங்கு கென்னடி அலுவலக உதவியாளரான பெக்கி ஆஷே என்பவருடன் டெஸ்க் மீது தகாத முறையில் உறவு கொண்டு இருந்துள்ளார்.இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஜாக்குலின் தனது நண்பர் ஒருவரிடம் எனது தந்தையால் இது போன்ற துரோக செயலுக்கு நான் பயன்படுத்தப்பட்டு விட்டேன்.ஆனால் கென்னடியின் பெண்கள் மீதான போதை என்னை பெரிய அளவில் துன்புறுத்தி விட்டது என்று கூறியுள்ளார்.

கென்னடியின் இத்தகைய கொடும் செயலால் அவரது மனைவி ஜாக்குலின் பைத்தியமாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு நாள் இரவு ஓட்டல் ஒன்றில் இருந்து பெண் ஒருவருடன் வீட்டிற்கு வந்த கென்னடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜாக்குலின். இந்த மோதல் தெரு வரை வந்தது.இதனை தொடர்ந்து கார்லைல் நகரில் உள்ள கிளினிக் ஒன்றில் ஜாக்குலின் அனுமதிக்கப்பட்டு அங்கு 3 முறை எலெக்ட்ரிக் ஷாக் சிகிச்சை கொடுக்கப்பட்டு உள்ளது.நாகரீகமாக நடந்து கொண்டவர்கள் என்றால் அது வயதான ஜோ கென்னடி மட்டுமே.மற்ற கென்னடிகள் அனைவரும் பன்றிகளை போன்றவர்கள் என தனது பழைய டைரியில் ஜாக்குலின் எழுதியுள்ள விவரமும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி