துபாய்:-ஒருநாள் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் வீராட்கோலி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் டோனி தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார். ஷிகார் தவான் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சில் ‘டாப் 10’ வரிசையில் ஜடேஜா மட்டுமே இடம் பிடித்தார். அவர் 5வது இடத்தில் உள்ளார்.அணிகளின் தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு பின்தங்கியது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இலங்கை 2வது இடத்திலும் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி