பார்ட்டி, படப்பிடிப்பு என சென்னையில் விஷால் செல்லும் இடமெல்லாம் வரலட்சுமியும் கூடவே இருக்கிறார்.விஷால் தயாரித்து நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததுபோலவே அங்கேயும் ஆஜராகிவிட்ட வரலட்சுமி எந்நேரமும் விஷால் உடனே இருக்கிறார். இவர் விஷால் உடன் இருப்பதால் பூஜை படப்பிடிப்பு அநியாயத்துக்கு தாமதமாகிறதாம். வரலட்சுமி கேரவானுக்குள் இருப்பதால் ஷாட் முடிந்ததும் விஷாலும் கேரவானுக்குள் புகுந்து கொள்கிறார்.
ஷாட் ரெடியாகி உதவி இயக்குநர்கள் விஷாலை அழைக்கப்போனால், உள்ளே வரலட்சுமி உடன் பேசிக்கொண்டு இருப்பதால் கதவை தட்டி ஷாட்டுக்கு அழைக்க உதவி இயக்குநர்கள் தயங்குகிறார்கள். வரலட்சுமி உடன் பேசி முடித்து விஷாலாக வெளியே வந்தால்தான் உண்டு. இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதப்பட செம கடுப்பில் இருக்கிறாராம் ஹரி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி