செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…

உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…

உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!… post thumbnail image
புது டெல்லி:-உலகின் 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சேவைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோலின்படி தரவரிசை பட்டியலிடப்படுகிறது.சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டொன்றுக்கு 2 1/2 கோடி முதல் 4 கோடி பயணிகள் வரையில் கையாளும் உலகின் சிறந்த விமான நிலையங்களை தரவரிசைப் படுத்தும் சர்வதேச விமான நிலைய கவுன்சில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் இதற்கான விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்த விருதினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி