உன் சமையல் அறையில் படத்தில் பிரகாஷ் ராஜ், சினேகா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரகாஷ்ராஜே இயக்கி தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.வருகிற 13ம் தேதி முண்டாசுப்பட்டி, நான்தான் பாலா, மெல்லிசை ஆகிய மூன்று படங்கள் வருகின்றன. நான்தான் பாலா படத்தில் காமெடி நடிகர் விவேக் நாயகனாக நடித்துள்ளார்.வருகிற 20ம் தேதி அரிமா நம்பி, பூலோகம் படங்கள் வருகிறது. அரிமா நம்பியில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்து உள்ளார். பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.
27ம் தேதி சித்தார்த் நடிக்கும் ஜிகர்தண்டா, விஜய் இயக்கிய சைவம் படங்கள் ரிலீசாகின்றன. ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ், சுந்தர். சி இயக்கிய அரண்மனை உள்ளிட்ட மேலும் சில படங்களும் இம்மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி