நியூயார்க்:-பாகிஸ்தானை சேர்ந்தவர் நூர் ஹூசைன் (வயது 75) இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.கடந்த 2011ம் ஏப்ரல் 2 ம் தேதி தனது 66 வயது மனைவி நாசர் ஹூசைனிடம் இரவு சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் இதற்கு நாசர் மறுப்பு தெரிவித்து பாகிஸ்தானின் பருப்பு டிஷ் செய்யப்போவதாக கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஹூசைன் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கி உள்ளார் இதில் நாசர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யபட்ட நூர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் புர்ருக்லீன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி