சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘கத்தி’ படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.இந்நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார் சிம்புதேவன்.
ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம் தலைசுற்ற வைத்து விட்டது. அதனால், இப்போது ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரிடம் பேசியிருக்கிறார்கள். அதேப்போல், முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கும் முடிவில்தான் இருந்தார்கள்.
ஆனால், வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்துக்கு பல மாதங்களாக பாடல்களை கொடுக்காமல் அவர் இழுத்தடிப்பதைப்பார்த்து இப்போது தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்து விட்டனர்.விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் இசையமைத்திருந்தார். ஆக, இப்போது இரண்டாவதாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி