தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.ஹாலிடே படம் வருகிற 6ம் தேதி வெளியாகவிருப்பதால் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் மும்பை சென்றுள்ளார்.
இதனால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் போடப்பட்ட ஹாஸ்டல் செட்டில் நடந்து வந்த கத்தி படத்தின் ஷூட்டிங்குக்கு பிரேக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.பத்து நாட்களுக்குப் பிறகே மீண்டும் கத்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் இந்த இடைவெளியில் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ செஷன் பண்ணிவிடலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறாராம் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி