திருமண நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் எங்களுக்கு அன்பளிப்பு தரவேண்டாம் என்று இருவரும் திருமண பத்திரிக்கையுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் வைத்திருக்கிறார்கள்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:-எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ “எபிலிட்டி பவுண்டேஷன்” என்ற அமைப்புக்கு வழங்குங்கள்.
இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி