அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர். அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.
படத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம். டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்’ அதிரடி…….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி