2300 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் 17000 சோலார் செல்கள் அமைத்து மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும். சூரிய ஒளியிலிருந்து சக்தியை பெறும் அந்த விமானம் 633 கிலோ எடை கொண்ட லித்தியம் பேட்டரியில் அந்த சக்தியை சேமித்து இரவு மற்றும் பகல் நேரங்களிலும் பறக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் ஒரேயொரு விமானி மட்டுமே இருப்பார். 20 முதல் 25 நாட்களில் அது உலகத்தை சுற்றி வந்து விடும் இதன் பயணம் விமானியின் ஓய்வை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் தனது பயணத்தை துவங்கி முதலில் அது இந்தியாவில் தரையிறங்கும்.
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் ஓரிடத்திலும், கிழக்கு கடற்கரை பகுதியில் ஓரிடத்திலும் என இரு இடங்களில் நின்று பின்னர் அந்த விமானம் மியான்மர் நாட்டிற்கு செல்லும் என கூறப்படுகிறது.இதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இம்முயற்சியை மார்கஸ் ஷெர்டெல் என்ற விமானி வானில் 2 மணி 17 நிமிடங்கள் பறந்து வெற்றிகரமாக பரிசோதித்தார். விமானத்தின் சிமுலேட்டர் போன்ற பாகங்கள் முறையாக இயங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி