இந்த மாநிலத்தில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பார்மர் மாவட்டத்தில் உள்ள 160 கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.மாநில குடிநீர் வழங்கல் துறை மூலம் இங்கு சுத்திகரிக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர் 10 காசுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில குடிநீர் வழங்கல்துறை கூடுதல் செயற்பொறியாளர் ஜடோல் கூறியதாவது:–
தேசிய ஊரக குடிநீர் அமைப்பின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 160 கிராமங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது 36 கிராமங்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்படும். இதன்மூலம் சுகாதாராமான, தரமானகுடிநீர் 1 லிட்டர் 10 காசுக்கு வழங்கப்படும்.நிலத்தடிநீர் வற்றிவிட்டதாலும் கிடைக்கும் தண்ணீர் உப்புத்தன்மையுடன் இருப்பதாலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி