செய்திகள்,திரையுலகம் விழா மேடையில் டென்சனான நடிகர் மன்சூரலிகான்!…

விழா மேடையில் டென்சனான நடிகர் மன்சூரலிகான்!…

விழா மேடையில் டென்சனான நடிகர் மன்சூரலிகான்!… post thumbnail image
சென்னை:-புதுமுகங்கள் நடித்துள்ள ‘மதுரக்காரங்கே’ படத்தின் ஆடியோ விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில், கலைப்புலி எஸ்.தாணு, அபிராமி ராமநாதன், டைரக்டர் அரவிந்த் ராஜ், நடிகர் மன்சூரலிகான், பாடகி சின்னப்பொண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மன்சூரலிகான் பேசும்போது, மதுரக்காரங்கன்னாலே ரொம்ப பாசக்காரங்க. கோபம் வந்தா ரோசக்காரங்க என்று மதுரையை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அப்போது பார்த்து மைக் ஒர்க் பண்ணவில்லை. இதனால் டென்சனாகி விட்டார் மன்சூரலிகான். அதையடுத்து அவரது பேச்சு அந்த விழா அரங்கம் பக்கம் தாவியது.சினிமாக்காரங்கள ஒரு படத்தை கஷ்டப்பட்டு எடுத்து அதை வெளியிட இந்த மாதிரி விழா பண்றாங்க. அதுக்கு விழா நடத்த. இந்த மாதிரி ஸ்டுடியோக்களுக்கு 40 ஆயிரம் வீதம் கொடுத்து விழா நடத்துறாஙக. ஆனால், ஸ்டுடியோவிற்குள் வரும் வாசலில் இரண்டு கதவு இருக்க ஒரு கதவை திறப்பதே இல்லை. அந்த ஒரு கதவுக்குள்தான் கஷ்டப்பட்டு புகுந்து வர வேண்டியுள்ளது.

அதை தாண்டி ஹாலுக்குள்ள வந்தா, மைக் ஒர்க் பண்ணமாட்டேங்குது. இதையெல்லாம் இந்த ஸ்டுடியோ நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்று தனக்குள் பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டே, இதெல்லாம் நியாயமே இல்லை என்று சாப்ட்டாக சாடினார் மன்சூரலிகான்.அதையடுத்து ஒருவழியாக, வேறு மைக்கை ரெடி பண்ணி கொடுத்த பிறகு, தனது கோபத்தை ஓரங்கட்டி வைத்து விட்டு, தானும் மதுரக்காரன் என்பதால், மதுரக்காரங்கே படத்தை, மதுரக்காரங்களையும் பெருமையாக பேசத் தொடங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி