இதுதொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-நூறு ஆண்டுகளாக ஏவப்படும் விண்கலன்களில் இருந்து சிதறிய குப்பைகள் பூமியைச் சுற்றி ஒரு வளையமாக சுற்றி வருகின்றன. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் காபி கோப்பையை விட பெரிதாக கண்காணிக்கத்தக்க வகையில் உள்ளன. இந்த குப்பைகள் மோதுவதால் விண்வெளி பயணங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. ஒரு செ.மீ. நட்டுகூட ஒரு கையெறி குண்டு போன்று வேகமாக மோதும்.
குறைந்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றித்திரியும் உடைந்த செயற்கைக்கோள் பாகங்கள் போன்ற பெரிய அளவிலான பொருட்களை அகற்றி, அவற்றை மேல் நிலைகளுக்கு செலுத்துவதுதான் இந்த குப்பைகளை கட்டுப்படுத்த ஒரே வழி.
குப்பைகளை வலைகள் மூலம் மீன்பிடிப்பது போல் பிடித்து 800 கி.மீ. முதல் 1000 கி.மீ. உயரத்துக்கு கடத்தி துருவ வட்டப்பாதையில் விடும் வகையில் இ.டிஆர்பிட் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பைகளை பிடிக்கும் பல்வேறு வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி