சென்னை:-ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ள ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.
பொதுவாகவே ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த அளவுக்கு படத்துக்கு ‘டிமாண்ட்’ ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
பொதுவாகவே ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த அளவுக்கு படத்துக்கு ‘டிமாண்ட்’ ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் வேறு ரஜினியுடன் நடிப்பதால் படத்தின் மதிப்பு அதிகமாகவே உள்ளது. படம் ஆரம்பமான நாள் முதல் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. மைசூரில் ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
ஒரு டப்பிங் படத்திற்கு 30 கோடி ரூபாய் அளவில் விலை பேசப்பட்டு வருகிறது என்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். எந்த ஒரு படத்திற்கும் இல்லாத விலை இந்த படத்திற்காக பேசப்படுவது நேரடியாக தெலுங்குப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி