செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!…

முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!…

முன்னாள் கால்பந்து வீரர் பீலேயின் மகனுக்கு 33 ஆண்டுகள் ஜெயில்!… post thumbnail image
சாவ் பாலோ:-பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே ஒரு சிறந்த கால்பந்து வீரராவார். இவர் ஒரு தலை சிறந்த வீரராக முன்னாள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என்று அனைத்துத் தரப்பினராலும் புகழப்படுகின்றார்.

இவரது மகன் எட்சன் சோல்பி டோ நசிமெண்டோ (43) போதை மருந்துக் கும்பலுடன் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதான தீர்ப்பு நேற்று வெளிவந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுசானா பெரைரா அவரது பாஸ்போர்ட்டை இந்த வாரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கு குறித்த விவரங்களை அதிகம் வெளியிடமுடியாது என்ற நீதிபதி குற்றவாளி மேல்முறையீடுக்கு மனு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

தன்மீதான குற்றங்களை எட்சன் மறுத்தபோதும் தொழில்முறை கால்பந்து விளையாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் ஆர்வ மிகுதியில் போதை மருந்து உபயோகித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அந்நாட்டின் துறைமுக நகரமான சாண்டோசில் கடந்த 2005ல் 50 பேருடன் கைது செய்யப்பட்ட இவர்மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டது.
அப்போது அவர் ஆறு மாதங்களை உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறையில் கழித்தார். இப்போதும் இந்த வழக்கிற்கான விசாரணை இன்னும் முடியவில்லை. எட்சன் விரும்பினால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வர இங்கு பல வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி