சென்னை:-சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘சரவணன் என்கிற சூர்யா‘ என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து இயக்கியுள்ளேன்.
நானே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் தலைப்பை முறையாக பதிவு செய்து இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் எனக்கு வற்புறுத்தல் வந்தது.நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது.
படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி