செய்திகள் துறவியாகக் கொண்டாடப்படும் 100 வயது பிச்சைக்காரர்!…

துறவியாகக் கொண்டாடப்படும் 100 வயது பிச்சைக்காரர்!…

துறவியாகக் கொண்டாடப்படும் 100 வயது பிச்சைக்காரர்!… post thumbnail image
சோபியா:-கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பல்கேரியா இன்னமும் பொருளாதார மேம்பாட்டில் ஏழை நாடாகவே இருந்து வருகின்றது. இங்கு சராசரி மாத வருமானம் 420 யூரோக்கள் என்ற அளவிலேயே இருக்கின்றது.இந்நிலையில் இங்கு வசித்துவரும் பிச்சைக்காரர் ஒருவர் தனக்குக் கிடைத்த பணத்தை தான் வசிக்கும் இடத்தில் உள்ள தேவாலயத்திற்குத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.

100 வயதாகும் டோப்ரி டோப்ரேவ் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றார். இவர் துறவி போன்ற எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டு தனக்கு மற்றவர்கள் அளிக்கும் பணத்தை எல்லாம் அங்குள்ள அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தேவாலயத்திற்குக் கொடுத்துள்ளார்.
இவ்வாறு கடந்த 2009ல் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பின்படி 35,700 லெவாவை அவர் அளித்ததாக அந்த தேவாலயத்தின் அறங்காவலர்கள் குழுவின் தலைவர் பிஷப் டிகோன் தெரிவித்துள்ளார்.

இதுபோல் 2,500 முதல் 10,000 யூரோ வரை டோப்ரி தங்களுக்கும் அளித்துள்ளதாகப் பல மடாலயங்கள் தெரிவிக்கின்றன. வறுமை மற்றும் ஊழலால் சூறையாடப்பட்டுவரும் இந்த நாட்டில் தனக்குக் கிடைக்கும் பணத்தை தருமம் செய்யும் டோப்ரியை மக்கள் ஒரு துறவியாகவே தற்போது கொண்டாடி வருகின்றனர் என்று பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி