33 மீனவர்களில் 6 படகுகளில் சென்ற 29 மீனவர்கள் மட்டும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆனந்தி கனகரத்தினம், ஜூன் 16ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 29 மீனவர்களும் சென்ற 6 படகுகளில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ்.கருவி உள்பட அனைத்து மீன் பிடி சாதனங்களும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக ராஜபக்சே தமது டுவிட்டர் வலை தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழக மீனவர்கள் 29 பேரும் இன்று மாலைக்குள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.மீதம் உள்ள 4 மீனவர்களிடம் மன்னார் மீன்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 தமிழக மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி