வீட்டுக்குள் ஆவி நடமாடுவதாக நாயகி தெரிவிக்க அதை அனைவரும் நம்ப மறுக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு வருமாறு நாயகனுக்கு அவரச அழைப்பு வருகிறது. இதனால் அந்த வீட்டை விட்டு நாயகன் வெளியே கிளம்புகிறார். நாயகன் வீட்டை விட்டு சென்றவுடன் தனது தோழியிடம் வீட்டில் ஆவி நடமாட்டம் இருப்பதாக நாயகி கூறுகிறார். உடனே தோழியின் உதவியுடன் நாயகி சாமியார் ஒருவரை அணுகுகிறார். அவர் வீட்டில் பரிகாரம் செய்து பேயை விரட்டலாம் என்கிறார்.அதன்படி சாமியார் வீட்டில் பூஜை செய்து கொண்டிருக்கும் போதே வீட்டின் காவலாளி இறந்து விடுகிறார். உடனே சாமியார் வீட்டில் ஆவி நடமாட்டம் இருப்பது உண்மை தான் என்று கூறுவதுடன் வரும் அமாவாசை அன்று பூஜை செய்து பேயை விரட்டிவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
இந்நிலையில் வேலை நிமித்தமாக வெளியே சென்ற நாயகன் மீண்டும் பண்ணை வீட்டுக்கு திரும்புகிறார். அவர் வீட்டில் என்ன நடந்தது என கேட்கிறார். நாயகி நடந்த சம்பவம் அனைத்தையும் கூறுகிறார். இதை கேட்ட நாயகன் உடனே அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று கூறுகிறார். அப்போது நாயகியின் உடலுக்குள் புகுந்துவிடும் ஆவி நாயகனை நோக்கி உன்னை விடமாட்டேன் என்கிறது.ஆவி நாயகனை பழிவாங்கியதா? அந்த ஆவி யார்? எதற்காக அது நாயகனை பழி வாங்க நினைக்கிறது என்பதே மீதிக்கதை. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் வேணு போலீஸ் வேடத்தில் மிடுக்காக வந்து கலக்குகிறார். ஆனால் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. நாயகி மது ஷாலினி அழகாகவும், பேயை கண்டு மிரளும் காட்சியில் பயந்தவராகவும் அருமையாக நடித்திருக்கிறார். படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.
படத்தின் பின்னணி இசை அசத்தலாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் பேயை பற்றிய படம் என்பதால் பெரும்பாலான காட்சிகளை இருட்டிலேயே எடுத்துள்ளார். திகில் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பேயை காண்பிக்காமலேயே வெவ்வேறு காட்சிகளின் மூலம் பேய் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் தேவையில்லாத ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியும் மிக நீளமாக அமைந்து ரசிகர்களை நெளிய வைக்கிறது. படத்தில் பண்ணை வீடும், கல்லறை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பற்றுள்ள போது திடீரென்று பாழடைந்த வீடு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் ‘கல்பனா ஹவுஸ்’ திகில்…….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி