ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்டி நேற்று அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இந்திய கிராமப்புறங்களில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களையும், சிறுமிகளையும் குறிவைத்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அரசு அடையாளம் கண்டு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெறும் பெண்கள் பிரச்னை மட்டுமல்ல இது ஒரு மனித உரிமை மீறலும் கூட. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.என கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி