நமது நாட்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி, வாத்தியக் கலைஞராகவும், இசைக் குழுவை நிர்வகிப்பவராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும் இளையராஜா விளங்கியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர், பல்வேறு மொழிகளில் 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது பின்னணி இசை பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது.
திரை இசையுலகில் யாருமே எட்ட முடியாத சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் இளையராஜாவின் 71வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடினர்.சென்னையில் இளையராஜா மரக்கன்றுகளை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 71,001 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி