பொம்மை, விலங்குகள், மனிதர்கள்தான் அனிமேஷன் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாம ஏன் அன்றாடம் பயன்படுத்தும் எண்களுக்கு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து ஒரு கதைய உருவாக்க கூடாது என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடாக சீரோ முதல் 9 வரையிலான எண்களுக்கு உயிர் கொடுத்து நடிக்க வைத்தேன்.
இந்த பத்து நம்பர்களும் ஒரு புதையலைத் தேடி செல்கின்றன. அப்போது அவர்களுக்குள் வரும் மோதல், ஈகோ, துரோகம், காதல்தான் கதை. கடைசியில் மனிதனுக்கு ஈகோ இருக்க கூடாது. ஈகோ இல்லாவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்கிற மெசோஜோடு படத்தை முடிக்கிறேன்.
சுமார் 6 வருடங்களாக 150 கம்ப்யூட்டர் நிபுணர்களுடன் இணைந்து இதனை உருவாக்கி இருக்கிறேன். இதனை வெளியிட முதலில் தயக்கம் இருந்தது. தற்போது கோச்சடையான் படத்துக்கு மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்ததும் வெளியிடும் தைரியம் வந்து விட்டது. தமிழ் தவிர பிற இந்திய மொழிகளிலும் டப் செய்ய இருக்கிறோம். என்கிறார் நிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி