நான் இஸ்லாம் மதத்தை 2010ல் இருந்தே பின்பற்றுகிறேன். எனது தந்தை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். என் தாய் இந்து மதத்தை சேர்ந்தவர். நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். நான் மதம் மாறுவதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த என் பெற்றோர்கள் பிறகு சம்மதித்தனர்.நான் நடிகையாக இருப்பதால் வெளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் பர்தா அணிய ஆரம்பித்தேன். இது எனக்கு சவுகரியமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. அதன்பிறகு பர்தா அணிவதால் இஸ்லாம் மதத்தை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டேன்.
இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் யாருடைய கட்டாயத்திற்காகவும் மாறவில்லை. என்னுடைய முழு சம்மதத்தோடு மாறியுள்ளேன். கைவசம் படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். எனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிவிட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி