இந்நிலையில், தனக்கு பேசப்பட்ட பணம் வரவில்லை என்று கோபித்துக்கொண்டு லண்டனுக்கு பறந்து விட்டார் எமிஜாக்சன். அவர் நடிக்க வேண்டிய இன்னும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சி படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
இதேபோல் மேலும் சில கலைஞர்களுக்கும் சம்பள பாக்கி இருந்தபோதும் அவர்கள் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
ஷங்கர் எப்படியாவது படத்தை கரையேற்றி நமக்கு தர வேண்டியதை சல்லி பைசா பாக்கி இல்லாமல் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஐ படத்தை கைமாற்றி விட்டு இறுதிகட்ட பணிகளை முடிக்க ஷங்கர்தரப்பு முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி