பல்வேறு நடிகர், நடிகையர் படத்தைப் பார்த்து பாராட்டித் தள்ளி வருகிறார்கள். ஏ.நாகேஸ்வரராவ் கடைசியாக நடித்த படம் என்ற சிறப்பு கொண்ட இந்த படத்தில் ‘அக்கினேனி’ குடும்பத்தைச் சேர்ந்த நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஸ்ரேயா, சமந்தா ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை சமீபத்தில் கமல்ஹாசன் பார்த்து ரசித்துள்ளார்.நான் சிவாஜிகணேசன், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோரின் தீவிர ரசிகன்.
‘மனம்’ படத்தைப் பார்த்ததும் ஏஎன்ஆர் மீண்டும் எனது அபிமான நடிகராகிவிட்டார். இப்படிப்பட்ட சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக ‘அக்கினேனி’ குடும்பத்தை மிகவும் பாராட்டுகிறேன். மிகச் சிறப்பான படமாக ‘மனம்’ அமைந்திருக்கிறது.என்று கமல் பாராட்டியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி