மறுநாள் ஆற்றங்கரையோரம் சலவைத் தொழிலாளியின் மனைவி இறந்து கிடக்கிறாள். அவள் ஆற்று வெள்ளத்தில் அடித்து இறந்துவிட்டதாக பொதுமக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவள் பலாத்காரம் செய்யப்பட்டுத்தான் இறந்துபோனால் என்பது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதனால் அந்த சிறுவர்கள் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.இந்நிலையில் மர்மநபர்கள் யார் என்பதை மிகவும் சாதுர்யமாக கண்டுபிடிக்கின்றனர். இவர்களை எப்படி தண்டிப்பது என்று யோசிக்கும் நிலையில், இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தாத்தாவின் வீட்டில் இருந்து ராணுவத்தில் பயன்படுத்தும் தொலைதொடர்பு கருவி ஒன்று கிடைக்கிறது.
இதை வைத்து இவர்கள் புத்திசாலித்தனத்தினால் அதை வானொலியாக பயன்படுத்தி அந்த கிராமத்தில் ‘பீப்பீ’ என ஒரு வானொலியை உருவாக்குகிறார்கள். இதை வைத்து அவர்களை எப்படி போலீசில் சிக்க வைக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.படத்தின் கதாநாயகர்களாக வலம்வரும் கௌரவ் , பிரவீன் , வசந்த் மூன்று பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. கதை முழுவதும் இவர்கள் மூவருமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.சிறுமியாக வரும் வர்ஷினி, சிறுவயதிலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.
புதுமுக இயக்குனரான ஹலிதா சாமீம் ஒரு அனுபவசாலி இயக்குனர் போல் கதையை நகர்த்தியிருக்கிறார். சிறுவர்கள் நடிக்கும் படத்தில் முகத்தை சுளிக்க வைக்கும் காட்சிகளை பயன்படுத்தாமல் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சிறுவர்களை வைத்து இரண்டு மணி நேரத்திற்குள் கதையை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். ஆனால், தேவையில்லாத காட்சிகளை புகுத்தி படத்தை இரண்டரை மணி நேரம் இழுத்து கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறார்.அருள்தேவின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் படத்திற்கு வலுசேர்க்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் கிராமத்தை அழகாக படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ‘பூவரசம் பீப்பீ’ சிறுவர்களின் ஆட்டம்……..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி