மஞ்சு வாரியர் சிறந்த நடிகை. அவர் கேரளாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு. சில சூழ்நிலை காரணமாக அவர் 14 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டமானது. அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து உள்ளது. கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். என்று பேசினார்.மலையாள படஉலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மஞ்சுவாரியர். இவர் திரை உலகில் கொடிகட்டி பறந்த போது பிரபல மலையாள நடிகர் திலீப்புடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
திருமணத்திற்கு பிறகு மஞ்சு வாரியர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு குடும்பத் தலைவியாக வாழ்க்கை நடத்தி வந்தார். அதன் பிறகு மஞ்சு வாரியருக்கும் திலீப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.இந்நிலையில் 14 வருடத்திற்கு பிறகு மஞ்சுவாரியர் ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாள படத்தில் நடித்தார். இந்த படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி