புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று இரண்டாவது முறையாக நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, முன்னுரிமை அளிக்க வேண்டிய 10 அம்சங்கள் என கீழ்க்கண்டவற்றை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
1. அதிகார வர்க்கத்திடம் நம்பிக்கை வளர்த்தல்
2. அதிகார வர்க்கத்துக்கு பணி சுதந்திரம், புதுமையான யோசனைகளுக்கு வரவேற்பு
3. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை
4. கல்வி, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி, சாலை வசதிக்கு முன்னுரிமை
5. மக்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு முன்னுரிமை
6. உள்கட்டமைப்பு, முதலீடு சீர்திருத்தங்கள்
7. அமைச்சகங்கள் இடையேயான பிரச்சினைகளை கவனிக்க ஒரு அமைப்புமுறை
8. பொருளாதார பிரச்சினைகள் கவனிக்கப்படல்
9. குறித்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள்
10. அரசு கொள்கைகளில் ஸ்திரத்தன்மை, நிலைத்து நிற்கும் ஆற்றல்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி