மும்பை:-பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான பாபிதியோல்,மும்பையில் உள்ள இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார். மிக அதிக அளவில் மது அருந்தியதால் போதையில் தள்ளாடிய பாபிதியோல் மீண்டும் மது குடிக்க விரும்பினார். ஆனால் அவரால் மதுவை கிளாஸில் ஊற்ற முடியவில்லை.
அந்த சமயம் அங்கு வந்த பாதுகாவலரிடம் தனக்கு மது பரிமாற கூறினார். செக்யூரிட்டி அதற்கு மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமின்றி அவரை தாக்கவும் முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் பாபி தியோலின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.
தொடர்ந்து அடிவிழுந்தது.இந்த சம்பவத்தினால் அந்த இரவு பார்ட்டியின் பதட்டம் ஏற்பட்டது.பின்னர் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் செக்யூரிட்டியை சமாதானபடுத்தி அனுப்பிவிட்டு பாபிதியோலை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி