அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மாமகன் இயக்கத்தில், விமல், பிரசன்னா, ரிச்சர்டு, அருந்ததி, நந்தகி நடித்திருக்கும் படம் ‘நேற்று இன்று’. படம் பற்றி இயக்குநர் பத்மாமகன் கூறுகையில்,ஒரு நாள். என் மனைவி மாலதியை அழைத்தேன். “இந்த படத்துக்கு நீதான் தயாரிப்பாளர். நான் தான் டைரக்டர்” என்றேன். என் மனைவி ரொம்ப நல்லவர். நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிவிடக் கூடியவர். உடனே “சரி” என்றார். “படத் தயாரிப்புச் செலவுக்கு உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்?” என்று கேட்டேன்.
“என்னிடம் ஏது பணம்? அறுந்துபோன கம்மல் ஜிமிக்கிதான் பாக்கி இருக்கிறது. வேண்டுமானால் அதை எடுத்துக் கொண்டு போங்கள்” என்றார். அதை எடுத்துக் கொண்டுபோய் கடையில் கொடுத்தேன். 12ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. அதில் 2ஆயிரம் ரூபாயை வீட்டுச் செலவுக்குக் கொடுத்தேன். மீதி இருந்த 10ஆயிரம் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட படம்தான் கூத்து. அந்த கூத்துதான் தற்போது நேற்று இன்று என்று பெயர் மாறி அடுத்த மாதம் வெளியாக உள்ளது. என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி