அவர் ஒரு பேச்சுக்காக அப்படி சொன்னாலும், அதற்கு டைரக்டர் விஜய் வீட்டார் பலத்த எதிர்ப்பு தெரிவித்து விட்டார்களாம். அதையடுத்து திருமணத்துக்குப்பிறகு கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று அமலாபால் உறுதியளித்த பிறகுதான் அமைதி ஆனார்களாம்.இதேபோல்தான் நஸ்ரியாவுக்கும் நிலைமை ஏறபட்டுள்ளது. அதாவது, அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பஹத்பாசில் நல்ல கேரக்டர்களில் நடிக்க விரும்பினால் நடிக்குமாறு நஸ்ரியாவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருந்தாராம். அதனால் திருமணத்துக்கு பிறகு நடிப்பதற்காக சில கதைகளாக கேட்டு வந்தார்.
இந்த சேதி பஹத்பாசில் தந்தையான டைரக்டர் பாசிலுக்கு தெரியவந்தபோது கொதித்து விட்டாராம். நடித்து வரும் படங்களோடு சினிமாவை விட்டு விட வேண்டும் அதன்பிறகு சினிமாவிற்குள் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது என்று கண்டிசன் போட்டு விட்டாராம். இதனால், நல்ல கதைகளாக கேட்டு வைத்திருந்த நஸ்ரியா அந்த படங்களில் இருந்து சத்தமில்லாமல் விலகி விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி