தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.இதுகுறித்து மோனிகா கூறியுள்ளதாவது:-இந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை.எனவே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும் இஸ்லாம் மதத்தின் கொள்கைகளும் எனக்கு பிடித்து இருந்தது. 2010ம் ஆண்டே மதம் மாற முடிவெடுத்தேன்.
ஆனால் அது இப்போது தான் நடந்துள்ளது. எனது அம்மா இந்து மதத்தை சேர்ந்தவர்.அப்பா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரது சம்மதத்துடன் தான் மதம் மாறியுள்ளேன். விரைவில் நான் நடித்த கடைசி படமான ‘நதிகள் நனைவதில்லை’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி