சென்னை:-சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் யாமிருக்க பயமே. சுமார் 5 கோடியில் தயாரான படம் இதுவரை 10 கோடிக்குமேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் நடித்திருந்தனர், டீகே இயக்கி இருந்தார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார்.
தமிழில் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை பலர் கேட்டனர். ஆனால் எல்ரெட் குமாரே அதனை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறார். தமிழில் இயக்கிய டீகேவே இயக்குகிறார். இதற்காக இருவரும் ஐதராபாத்தில் தங்கி நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்கள். இந்தி ரீமேக் உரிமையை வேறொரு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு மொழியிலும் தமிழை விட பிரமாண்டமாகவும், பெரிய நடிகர்களை கொண்டும் ரீமேக் ஆகிறது யாமிருக்க பயமே.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி